உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., மனித வளத்துறை இயக்குனருக்கு சிறப்பு விருது

என்.எல்.சி., மனித வளத்துறை இயக்குனருக்கு சிறப்பு விருது

நெய்வேலி : உலக மனித வள மாநாட்டு அமைப்பு சார்பில் என்.எல்.சி., மனித வளத்துறை இயக்குனர் சரத்குமார் ஆச்சார்யாவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.என்.எல்.சி., மனிதவளத் துறை இயக்குனர் சரத்குமார் ஆச்சார்யா, மனிதவளத் துறையில் பல்வேறு சிறப்புமிக்க பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கு முன்பு பணியாற்றிய தேசிய அனல் மின்சக்தி நிறுவனம் மற்றும் என்.டி. பி.எல்., செயில் ஆகிய நிறுவனங்களில் மனிதவளத் துறையில் சிறப்பாக செயல்பட்டடார்.இதனை கவுரவிக்கும் வகையில், நிறுவனங்களை பிரபலப்படுத்தும் கல்வி நிலையம் மற்றும் உலக மனிதவள மாநாட்டு அமைப்பினர் சார்பில் மனித வளத் துறையின் சிறந்த தலைமைக்கான விருதினை வழங்கி கவுரவித்துள்ளது.கடந்த 22ம் தேதி சிங்கப்பூர் சின்டெக் நகரில் நடந்த ஆசிய கண்டத்தின் சிறந்த நிறுவனங்களுக்கான விருதுகளை வழங்கும் மாநாட்டில் இவ் விருது வழங்கப்பட்டது.விருது பெற்ற இயக்குனர் சரத்குமார் ஆச்சார்யா அந்த விருதினை என்.எல்.சி., சேர்மன் அன்சாரி மற்றும் இயக்குனர்கள் சுரேந்தர் மோகன், மகிழ்செல்வன் ஆகியோரிடம் கொடுத்து வாழ்த்து பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை