உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் "வராண்டா சேர்க்கைக்கு மாணவர்கள் குவிந்தனர்

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் "வராண்டா சேர்க்கைக்கு மாணவர்கள் குவிந்தனர்

கடலூர் : கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் 'வராண்டா' சேர்க்கை நடந்தது.கடலூர், தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ.,- பி.எஸ்.சி.,- பி.காம்., உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கான கவுன்சிலிங் கடந்த மாதம் நடந்தது. கவுன்சிலிங் முடிந்து மாணவ, மாணவிகள் சேர்க்கை கடந்த மாதம் இரண்டு கட்டமாக நடந்தது. சேர்க்கையின் கடைசி நாளான நேற்று 'வராண்டா' சேர்க்கை நடந்தது.இதற்காக மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் காலையில் இருந்தே கல்லூரியில் குவிந்தனர். கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி தலைமையில் சேர்க்கை நடந்தது. முனைவர்கள் காந்திமதி, ஞானசேகரன், பழனிவேல், ஜெயந்தி தேவி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை