உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதிய ஓய்வூதிய மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதிய மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடலூர் : புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவை கண்டித்து அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலர் சுந்தர்ராஜா தலைமை தாங்கினார். பொருளாளர் ராசாமணி வரவேற்றார்.மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியன் சிறப்புரை வழங்கினார். சத்துணவு பணியாளர் சங்க மாநிலப் பொதுச் செயலர் சீனுவாசன், மாவட்ட செயலர் திவ்யநாதன், நியாய விலை பணியாளர் சங்க ஜெயச்சந்திரராஜா, மாவட்ட தலைவர் சேகர், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.வட்ட தலைவர் தாமோதரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !