உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழிலாளர் பற்றாக்குறையால் பாதாள சாக்கடை பணி தாமதம்

தொழிலாளர் பற்றாக்குறையால் பாதாள சாக்கடை பணி தாமதம்

கடலூர் : கடலூரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப்பணி தொழிலாளர்கள் பற்றாக்குறையால் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாமல் தாமதமாகி வருகிறது.கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி துவங்கியது. கடந்த நாலரை ஆண்டுகளாகியும் இன்னமும் முடிந்தபாடில்லை.கலெக்டர் அமுதவல்லி இப்பிரச்னை குறித்து அதிகாரிகளிடம் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகள் மஞ்சகுப்பம் நேதாஜி ரோட்டில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் ஜூன் 27ம் தேதிக்குள்ளும், மொத்தப் பணியும் செப்டம்பர் மாத்திற்குள் முடிக்கப் பட்டுவிடும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.ஆனால் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையே இதுவரை முடிக்கப்படவில்லை. இதற்கு காரணம் இத்திட்டப்பணி கடந்த நாலரை ஆண்டுகளுக்கு முன் உள்ள தொழிலாளர்கள் கூலியை அடிப்படையாகக் கொண்டு டெண்டர் விடப்பட்டது. ஆனால் இன்று தொழிலாளர்கள் கூலி எவ்வளவோ உயர்ந்து விட்டது.இதனால் குறைந்தபட்ச கூலியில் வேலை செய்ய பல தொழிலாளர்கள் வர மறுக்கின்றனர். கடலூர் பாதாள சாக்கடைத் திட்டத்தில் 4 கான்ட்ராக்டர்கள் பணி செய்து வருகின்றனர்.அவற்றில் 2 கான்ட்ராக்டர்கள் பைப் லைன் புதைக்கும் வேலையை செய்து வருகின்றனர். இவர்கள் அதிகாரிகளின் நெருக்கடியால் ஆளுக்கொரு சாலையில் பணியை துவங்கி விட்டார்களே தவிர இவர்களிடம் தொழிலாளர்கள் இல்லை.இருக்கின்ற ஒரே தொழிலாளர்கள் குழுவை வைத்தே இருவரும் பணிகளை முடித்துக் கொள்ளலாம் என்கிற நிலையில் நாட்களை தள்ளி வருகின்றனர். இதனால் பணிகள் முடிய மேலும் பல மாதங்கள் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை