உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நாடு வளர்ச்சிபெற கல்வியால் மட்டுமே முடியும்

நாடு வளர்ச்சிபெற கல்வியால் மட்டுமே முடியும்

கடலூர்:''கல்வியால்தான் ஒரு மாநிலம் முதன்மை பெற்ற மாநிலமாக மாறும்'' என அமைச்சர் சம்பத் பேசினார்.புதுச்சேரி - கடலூர் உயர்மறை மாவட்டத்தின் 125வது ஆண்டு நிறைவு விழா கடலூர் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது.புதுச்சேரி - கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ரட்சகர் வரவேற்றார். விழாவில் டில்லி பாப்பரசர் 16ம் பெனடிக்ட்டின் தூதர் சல்வதோர் பெனன்சியோ, கடலூர் - புதுச்சேரி உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயருக்கு கல்விச் செம்மல் விருதும், முன்னாள் பள்ளி முதல்வர் ரட்சகருக்கு சிறந்த கல்வியாளர் விருதும் வழங்கி, இலவச கம்ப்யூட்டர் பயிற்சித் திட்டத்தை துவக்கி வைத்தார். எம்.பி., அழகிரி சிறப்பு மலரை வெளியிட்டார்.முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன், பள்ளி முதல்வர் ஆக்னல், அருட் தந்தைகள் அருளானந்தம், சாமிநாதன், டாக்டர் சந்திரன், வக்கீல் வேலாயுதம் உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியை பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினார்.விழாவில் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் சம்பத் பேசியதாவது:நாடு முழு வளர்ச்சி பெற கல்வியால் மட்டுமே முடியும். கல்வியால்தான் ஒரு மாநிலம் முதன்மை பெற்ற மாநிலமாக மாறும். தமிழக முதல்வர் கல்வியில் மிகப்பெரிய திட்டங்களை வகுத்து புரட்சி ஏற்படுத்தியுள்ளார்.கல்வி அனைத்து கீழ்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும். கிராமப்புற மாணவர்கள் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதுதான் அரசின் தலையாய கடமை.தகவல் தொழில்நுட்பத்துறை, பவுதீகத்துறையில் உலகளவில் போட்டி போடக்கூடிய நாடுகளில் இந்திய மாணவர்கள் குறிப்பாக தமிழக மாணவர்கள் முதன்மை பெற்றவர்கள்.இவ்வாறு அமைச்சர் சம்பத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ