உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழுநோய் விழிப்புணர்வு பயிற்சி முகாம்

தொழுநோய் விழிப்புணர்வு பயிற்சி முகாம்

கடலூர்:எஸ்.குமராபுரம் கிருஷ்ணா மருத்துவமனை செவிலியர் மாணவியர்களுக்கு தொழுநோய் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.நடுவீரப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் ரூபாவதி தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் காசிநாதன் வரவேற்றார். தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகள், நகைகள், கூட்டு மருந்து சிகிச்சை, ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறுவதின் அவசியம், நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஊனத்தடுப்பு முறை குறித்து மருத்துவமல்லா மேற்பார்வையாளர்கள் பச்சையப்பன், சந்திரசேகரன், ராமலிங்கம், அந்தோணிதாஸ் ஆகியோர் விளக்கினர்.சுகாதார ஆய்வாளர் பார்த்திபன் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை செவிலியர் பயிற்சி கல்லூரி முதல்வர் செல்வி, ஆசிரியர் இந்திராணி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை