கடலூர்:''தி.மு.க., வினரை கைது செய்வது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. உப்பை
தின்றவர்கள் தண்ணீர் குடிக்கின்றனர்.'' என அமைச்சர் சம்பத் பேசினார்.நகர அ.தி.மு.க., சார்பில் அண்ணா துரை பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்
கடலூரில் நடந்தது. நகர செயலர் குமார் தலைமை தாங்கினார். முன்னாள்
எம்.எல்.ஏ., அய்யப்பன், மருத்துவ பிரிவு துணைச் செயலர் சீனுவாசராஜா, ஒன்றிய
செயலர் பழனிச்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் குமார், அண்ணா
தொழிற்சங்க செயலர் பாலகிருஷ்ணன், மீனவர் பிரிவு செயலர் தங்கமணி, கவுன்சிலர்
கந்தன், முன்னாள் கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் உட்பட பலர்
பங்கேற்றனர்.கூட்டத்தில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் சம்பத்
பேசுகையில், 'தி.மு.க., வினரை கைது செய்வது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை.
உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடிக்கின்றனர். கடந்த ஆட்சியில் அனைத்து
அமைச்சர்களும் அதிகாரத்தை கையில் எடுத்தார்கள். நாங்கள் அப்படி அல்ல.
முதல்வரின் சுட்டு விரலுக்கு கட்டுப்பட்டுள்ளோம். கடலூரில் இரண்டு
ஆண்டுகளில் சாலை, வடிகால் வாய்க்கால், சுத்தமான குடி நீர் என அனைத்து
அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தருவதே எங்கள் நோக்கம்' என்றார்.மாவட்ட ஜெ., பேரவை பொருளாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.பண்ருட்டி: மாவட்ட
மாணவரணி தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். நகர செயலர் ரவிச்சந்திரன், அவைத்
தலைவர் ராஜதுரை வரவேற்றனர். ஜெ.,பேரவை முன்னாள் செயலர் பன்னீர்செல்வம், நகர
ஜெ.,பேரவைத் தலைவர் கமலக்கண்ணன், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன் முன்னிலை
வகித்தனர்.கூட்டத்தில் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் சம்பத், இளைஞர்,
இளம்பெண் பாசறை துணைச் செயலர் டாக்டர் கவிதா, தலைமைக் கழக பேச்சாளர்
காவேரி, மாவட்ட ஜெ., பேரவை செயலர் ரவிச்சந்திரன் ஆகியோர்
சிறப்புரையாற்றினர். சாதிக்பாஷா நன்றி கூறினார்.