உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாஸ்மாக்கை இடம் மாற்ற மனு

டாஸ்மாக்கை இடம் மாற்ற மனு

கடலூர்:கடலூர் அருகே சுப்ரமணியபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை இடம் மாற்ற செய்ய வேண்டும் என மா.கம்யூ., கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து மா.கம்யூ., ஒன்றியக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு:கடலூர் வட்டம், சுப்ரமணியபுரம் கிராமத்தில் ராமலிங்க உயர்நிலைப் பள்ளி, ஜீவா மெட்ரிக் பள்ளி பஸ் நிறுத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் 50 மீட்டருக்குள் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. குடிமக்களால் பெண்களும் பள்ளி செல்லும் மாணவிகளும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்திட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை