உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளிகளுக்கிடையேயான குறுவட்டப் போட்டிஏ.ஆர்.எல்.எம்., பள்ளி மாணவர்கள் வெற்றி

பள்ளிகளுக்கிடையேயான குறுவட்டப் போட்டிஏ.ஆர்.எல்.எம்., பள்ளி மாணவர்கள் வெற்றி

கடலூர்:கடலூர் பள்ளிகளுக்கிடையேயான குறுவட்ட தடகள மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற ஏ.ஆர்.எல்.எம்., பள்ளி மாணவர்களை பள்ளி தாளாளர் பாராட்டினார்.தடகள விளையாட்டுப்போட்டிகளில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் 400 மீ., ஓட்டத்தில் விக்னேஷ் முதலிடமும், ரத்தீஷ் 2ம் இடத்தையும் பிடித்தனர். 200 மீ., ஓட்டத்தில் பாலாஜி 2ம் இடத்தையும், 100 மீ., மற்றும் 200 மீ., ஓட்டத்தில் ஹரிஹரன் 3ம் இடத்தையும் பிடித்தனர். 17 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் 200 மீ., ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதலில் முகமது ஹசிம் முதல் இடத்தையும், 200 மீ., ஓட்டம் மற்றும் 100 மீ., தடை தாண்டுதலில் விக்னேஷ்குமார் 2ம் இடத்தையும் பெற்றார். 400 மீட்டரில் முதலிடத்தையும், 1,500 மீ., ஓட்டத்தில் 3ம் இடத்தையும் வினோத்குமார் பிடித்தார்.400 மீ., ஓட்டம் மற்றும் டிரிபிள் ஜம்ப் போட்டியில் சுதாகரன் மூன்றாம் இடத்தையும் பெற்றார்.டிரிபிள் ஜம்ப் போட்டியில் சபாரத்தினம் முதல் இடத்தை பெற்றார். 19 வயது பிரிவில் 100 மீ., ஓட்டத்தில் 2ம் இடத்தையும், 200 மீ., ஓட்டத்தில் 3ம் இடத்தையும் வித்யாசங்கர் பெற்றார்.போல் வால்டில் ஷேக் அப்துல் காதர் 3ம் இடத்தைப் பெற்றார்.4க்கு 100 மீ., தொடர் ஓட்டத்தில் ஏ.ஆர். எல்.எம்., பள்ளி 2ம் இடத்தையும், 4க்கு 400 மீ., தொடர் ஓட்டத்தில் 3ம் இடத்தையும் பெற்றுள்ளது.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் தாமோதரன், முதல்வர் ராஜயோககுமார், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜாராம், ராஜசேகரன் மற்றும் ஜெயதீபா பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை