உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரத்தில் தவித்த சிறுவன்பெற்றோரிடம் ஒப்படைப்பு

சிதம்பரத்தில் தவித்த சிறுவன்பெற்றோரிடம் ஒப்படைப்பு

சிதம்பரம்:பள்ளிக்குப் போக பிடிக்காமல் வழி தவறி சிதம்பரம் பஸ் நிலையத்தில் தவித்த சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.சிதம்பரம் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் அழுது கொண்டிருந்தான். அங்கிருந்தவர்கள் அச்சிறுவனை போலீசிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில், நாகை மாவட்டம், சீர்காழி திருக்கோலக்கா தெருவைச் சேர்ந்த கோடீஸ்வரன் மகன் பரமேஸ்வரன், 12 எனவும் அங்குள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படிப்பதாகவும் தெரிவித்தான்.மேலும், பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாததால் காலை வீட்டை விட்டு கிளம்பி பள்ளிக்குச் செல்லாமல் ரயில் மூலம் மயிலாடுதுறை சென்று அங்கிருந்து வேறொரு ரயில் பிடித்து சிதம்பரம் வந்ததையும் தெரிவித்தான். சீர்காழி போலீசார் மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களை வரவழைத்து நேற்று சிறுவன் பரமேஸ்வரனை அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை