மேலும் செய்திகள்
வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் கலந்தாய்வு
23-Aug-2025
கடலுார் : கடலுார் ஒன்றியத்திற்குட்பட்ட கோண்டூர், நத்தப்பட்டு, திருப்பணாம்பாக்கம், உள்ளேரிப்பட்டு பகுதி களில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். ஆய்வின் போது அவர் கூறியதாவது: கடலுார் ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டிற்கு 287 வீடுகள் 2025-26ம் ஆண்டிற்கு 477 வீடுகள் என மொத்தம் 764 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பல்வேறு நிலைகளில் வீடுகள் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை திருப்பணாம்பாக்கம் ஊராட்சியில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. கோண்டூர் மற்றும் நத்தப்பட்டு ஊராட்சியில் மாபெரும் துாய்மை பணிகளாக கஸ்டம்ஸ் சாலை பகுதியில் குப்பைகள் முறையாக அகற்றிடவும், பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுபவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பணாம்பாக்கம் ஊராட்சியில் கரைமேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலையின் தரம் மற்றும் உறுதித் தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு கலெக்டர் கூறினார். ஊரக வளர்ச்சித் துறை செயற் பொறியாளர் வரதராஜபெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியன், சக்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
23-Aug-2025