உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தவ அமுதம் பள்ளி ஆண்டு விழா

தவ அமுதம் பள்ளி ஆண்டு விழா

ஸ்ரீமுஷ்ணம், : ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 33வது ஆண்டுவிழா நடந்தது.பள்ளி தாளாளர் செங்கோல் தலைமை தாங்கினார். மதர் டிரஸ்ட் அறங்காவலர் கிருஷ்ணமூர்த்தி, செயல் இயக்குனர் சாலை கனகதாரன், முதல்வர் புனிதவள்ளி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் இளையகுமார் வரவேற்றார்.விழுப்புரம் வி.ஆர்.எஸ்.இன்ஜினியரிங் கல்லுாரி சேர்மன் சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, பேசினார். தொடர்ந்து மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. மதர் டிரஸ்ட் அறங்காவலர் முருகானந்தம், லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர்கள் தர்மலிங்கம், ராஜேந்திரன், சோலையப்பன், தலைவர் ரவிச்சந்திரன், பொறியாளர் ரத்தினவேல், டாக்டர் நிஷாந்த் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.ஆசிரியர் சிலம்பரசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை