உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊராட்சி தலைவரின் கணவருக்கு கொலைமிரட்டல்: வாலிபர் மீது வழக்கு

ஊராட்சி தலைவரின் கணவருக்கு கொலைமிரட்டல்: வாலிபர் மீது வழக்கு

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே ஊராட்சி தலைவரின் கணவருக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மங்கலம்பேட்டை அடுத்த வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரம்மதேவன், 51; இவரது மனைவி கலையரசி வலசை ஊராட்சி தலைவராக உள்ளார். இந்நிலையில், கடந்த 3ம் தேதி அதேபகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 26; பிரம்மதேவனை வழிமறித்து, கடந்த 10 ஆண்டுகளாக ஊராட்சியில் எந்த மாற்றமும் இல்லை என கூறி, அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் சந்தோஷ்குமார் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி