உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பயணிக்கு கொலை மிரட்டல் பஸ் டிரைவருக்கு வலை

பயணிக்கு கொலை மிரட்டல் பஸ் டிரைவருக்கு வலை

கடலுார் : வேகமாக பஸ் ஓட்டி யதை தட்டிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த தனியார் பஸ் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் அடுத்த கோண்டூர் பகுதியைச் சேர்ந்தவர், ராஜசேகர் மகன் சத்தியநாதன். தனியார் பஸ் டிரைவர். இவர், நேற்று முன்தினம் புதுச்சேரியில் இருந்து பயணிகளுடன் கடலுார் நோக்கி வேகமாக பஸ் ஓட்டி வந்தார்.பெரியகங்கனாங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, பஸ்சில் வந்த குண்டு உப்பலவாடி தாழங்குடாவைச் சேர்ந்தவர் பிரசாத்குமார், 44; ஏன் இவ்வளவு வேகமாக ஓட்டி வருகிறாய் என தட்டிக்கேட்டார்.இதில், ஆத்திரமடைந்த சத்தியநாதன், பிரசாத்குமாரை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.பிரசாத்குமார் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டிச் சாவடி போலீசார் வழக்குப் பதிந்து சத்தியநாதனைத் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி