உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுகாதார வளாக கட்டடம் இடித்து அகற்றம்

சுகாதார வளாக கட்டடம் இடித்து அகற்றம்

பெண்ணாடம்: திருக்குளம் கரையில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பொக்லைன் மூலம் இடித்து அகற்றினர்.பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தது.இதனை அகற்றக்கோரி, கோவில் நிர்வாகம் சார்பில் கடந்த 19.07.2022ல் ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கோர்ட்டில் வழக்கு தொடர்ப்பட்டது.கடந்த 2024ல் வழக்கை விசாரித்த அப்போதைய இணை ஆணையர் பரணிதரன், சுகாதார வளாக கட்டடத்தை பேரூராட்சி நிர்வாகம் தானாக முன்வந்து அகற்ற வேண்டுமென, உத்தரவிட்டார்.ஆனால், பேரூராட்சி நிர்வாகம் வரும் 31.05.2025 வரை குத்தகை காலம் இருப்பதாகவும், அதனால் கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக் கொண்டது. இந்நிலையில், கடலுார் ஹிந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் ஜோதி உத்தரவின்படி, நேற்று பகல் 11:00 மணிக்கு பொது சுகாதார வளாகத்தை இடிக்க உத்தரவிட்டார்.அதைத் தொடரந்து, உதவி ஆணையர் சந்திரன், ஆலய நிலங்கள் தாசில்தார் செந்தில்குமார், திட்டக்குடி சரக ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, கோவில் செயல் அலுவலர்கள் மகாதேவி, மாலா ஆகியோர் முன்னிலையில், பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் கட்டடத்தை பொக்லைன் மூலம் இடிக்கும் பணி நடந்தது.இதற்கு அருகில் வசிப்போர், வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை