மேலும் செய்திகள்
சிறுதானிய விவசாயிகளுக்குவேளாண் மாணவியர் பயிற்சி
02-Apr-2025
விருத்தாசலம் : தென்னையில் காண்டாமிருக வண்டு தடுப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.தஞ்சாவூர் அடுத்த ஈச்சங்கோட்டை எம்.எஸ்.சாமிநாதன் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள், விருத்தாசலத்தில் தங்கி, வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர். இவர்கள் கடலுார் அடுத்த பில்லாலி கிராமத்தில், தென்னையில் ஏற்படும் காண்டாமிருக வண்டு தாக்குதலை தடுப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.அப்போது, வண்டு தாக்குதலின் அறிகுறிகள், அவற்றை தடுக்கும் செயல்முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கப் பயிற்சி அளித்தனர்.
02-Apr-2025