உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வேளாண்  துணை இயக்குநர் ஆய்வு 

 வேளாண்  துணை இயக்குநர் ஆய்வு 

சிதம்பரம்: சம்பா பருவத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து, வேளாண் துணை இயக்குநர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். குமராட்சி மற்றும் எள்ளேரி, வீரநத்தம், கீழவன்னியூர், வானதிராயன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சம்பா பருவத்தில் செயல்படுத்தப்பட்ட மத்திய திட்டங்கள், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்க திட்ட நேரடி நெல் விதைப்பு செயல்விளக்க தொகுப்பு திடல்கள் ஆகியவற்றை வேளாண் துணை இயக்குநர் (மத்திய திட்டம்) அமிர்தராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, விவசாயிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பின்னர், பூலாமேடு கிராமத்தில், அமைக்கப்பட்ட விதைப்பண்ணை வயல் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கினார். அப்போது, ஆட்மா திட்ட ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப குழு தலைவர் கோவிந்தசாமி, குமராட்சி வேளாண்மை உதவி இயக்குநர் தமிழ்வேல், வட்டார வேளாண்மை அலுவலர் நடராஜன், உதவி விதை அலுவலர் ராமச்சந்திரன், உதவி வேளாண்மை அலுவலர் பாரதிதாசன், வட்டார தொழில்நுட்ப மேளாலர் கல்பனா, உதவி தொழில்நுட்ப மேளாலர் எட்வின் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ