உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டி.ஜி.எம்., பள்ளி ஆண்டுவிழா

டி.ஜி.எம்., பள்ளி ஆண்டுவிழா

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு டி.ஜி.எம்., மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.பள்ளி தாளாளர் மாதரசி தலைமை தாங்கினார். முனைவர் ராமச்சந்திரன், நிர்வாகக்குழு கல்பனா ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் திருநாவுக்கரசன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இளஞ்செழியன், பேரூராட்சி தலைவர் தங்ககுலோத்துங்கன், சையது இப்ராகிம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், ஆசிரியர் மோகன் ஆண்டு விழா உரையாற்றினர். உதவி தலைமை ஆசிரியர் நன்மாறன் ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி உடற்கல்வித்துறை சார்பில் நடந்த பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது.ஆசிரியர்கள் எழில்மன்னன், வசந்தராஜன், தருமர், இளவரசன், செந்தில்வடிவு மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.தமிழாசிரியர் பாரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை