உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வயல்களிலிருந்து கரும்புகளை கரையேற்ற முடியாமல் தவிப்பு

வயல்களிலிருந்து கரும்புகளை கரையேற்ற முடியாமல் தவிப்பு

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுாரில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள பன்னீர் கரும்பு கட்டுகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியதால் கரையேற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் பன்னீர் கரும்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி சேத்தியாதோப்பு அடித்த வெய்யலுார், வாழைக்கொல்லை, வெள்ளியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பன்னீர் கரும்புகளை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் வயல்களில் இறங்கி கரும்பினை வெட்ட முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். அதே போல் கொள்முதல் செய்யப்பட்ட கரும்புகள் வயலில் கட்டுகளாக கட்டி போட்டிருந்தனர். மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் கரும்புகளை கரையேற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை