உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி

தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி

கடலுார்; 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து 'பதில் சொல் ; பரிசு வெல்' வினாடி வினா போட்டி குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதில், 16மாணவர்களை தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 சுற்றுகளாக போட்டி நடந்தது. பள்ளி நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜோதிலிங்கம் வரவேற்றார். போட்டியில் பிளஸ் 1 மாணவிகள் கிஷோரி, தரணிஸ்ரீ முதல் இடத்தையும், பிளஸ் 1 மாணவிகள் ஜித்தியஸ்ரீ, நித்தியஸ்ரீ இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றிபெற்ற மாணவிகளுக்கு அருணாச்சலா பதின்ம மேல்நிலைப்பள்ளி நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் பதக்கம், சான்றிதழ் வழங்கினார்.போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் அலோஷியல், சதீஷ், சங்கரலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை