உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காய்கறிகளை உழவர் சந்தையில் விற்க விவசாயிகளுக்கு அழைப்பு

காய்கறிகளை உழவர் சந்தையில் விற்க விவசாயிகளுக்கு அழைப்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் காய்கறி பயிரிடும் விவசாயிகள் உழவர் சந்தையில் விற்று லாபமடையலாம் என விவசாயிகளுக்கு வேளாண்மை துணை இயக்குனர் நந்தினி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: விருத்தாசலம் உழவர் சந்தையில் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் காய்கறிகள், பழங்கள், தேங்காய் மற்றும் கீரைகளை நேரடியாக விற்பனை செய்து லாபம் அடைகின்றனர். அதுபோல் தற்போது ஆடிப் பட்டத்தில் கத்தரி, வெண்டை, புடலங்காய், பூசணி, பாகல் மற்றும் கீரை பயிர் செய்யும் விவசாயிகள் உழவர் சந்தையில் விற்பனை செய்யலாம். அடையாள அட்டை இல்லாத விவசாயிகள் உழவர் சந்தையை அணுகினால் உடனடியாக அடையாள அட்டை வழங்கப்படும். இதுகுறித்த விளக்கக் கூட்டம் பெருந்துறை, பெரியகோட்டுமுளை, தொட்டிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்டது. மேலும் பல்வேறு கிராமங்களில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்று விளக்கங்களை பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ