கடலுாரில் 'தினமலர்' மெகா கோலப் போட்டி பரிசு மழையில் நனைந்த போட்டியாளர்கள்கடலுார்: 'தினமலர்' நாளிதழ் சார்பில் கடலுாரில் நடந்த மெகா கோலப்போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rt6b5mef&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பெண்களின் கோலமிடும் திறமைக்கு மகுடம் சூட்டும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் 'மெகா' கோலப்போட்டி நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு, சூப்பர் 'ருசி' பால் நிறுவனத்துடன் இணைந்து, கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் 'மெகா' கோலப்போட்டி நேற்று நடத்தப்பட்டது. பெண்கள் குவிந்தனர் கடலுார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான பெண் கள் அதிகாலை முதலே போட்டி நடந்த சில்வர் பீச்சில் ஆர்வமுடன் குவிந்தனர். காலை 7:00 மணிக்கு போட்டி துவங்குவதாக அறிவிக்கப்பட்டாலும், கொட்டும் பனியையும் பொருட்படுத்தா மல் அதிகாலை 5:00 மணி முதலே பெண்கள் அணி அணியாக வரத் துவங்கினர். 500க்கும் மேற்பட்ட பெண்கள் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அழகோவியங்கள் புள்ளிக்கோலம், ரங்கோலி, டிசைன் என மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. போட்டியாளர்களுக்கு 4க்கு 4 அடி இடம் ஒதுக்கப்பட்டது. சரியாக 7:00 மணிக்கு துவங்கிய போட்டி, 8:00 மணிக்கு முடிந்தது. ஒரு மணி நேரத்தில், போட்டியாளர்கள் பல்வேறு வண்ணங்களில் கோலங்களை வரைந்து அசத்தினர். இதனால், கடற்கரை சாலை அழகோவியங்களாக காட்சியளித்தன. நடுவர்குழு திணறல் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தீபா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி, ஓய்வு பெற்ற ஆசிரியை ரமாமணி திருமலை ஆகியோர் அடங்கிய நடுவர் குழுவினர், சிறந்த கோலங்களை தேர்வு செய்தனர். நுாற்றுக்கணக்கான சிறந்த கோலங்களில் பரிசுக்குரிய கோலங்களை தேர்ந்தெடுப்பதில் நடுவர் குழுவினர் திணறினர். இப்படியும் கோலம் போட முடியுமா என வியக் கும் அளவிற்கு அனைத்து கோலங்களும் சிறப்பாக இருந்தன. இருப்பினும் இப்பணியை நடுவர் குழுவினர் நிதானித்து சிறந்த கோலங்களை தேர்வு செய்தனர். பரிசு மழையில் போட்டியாளர்கள் புள்ளிக்கோலம், ரங்கோலி, டிசைன் என 3 பிரிவுகளில் கோலப் போட்டி நடத்தப்பட்டது. இதில், ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த மூன்று கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி, மாநகர தி.மு.க., மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறந்த கோலமிட்ட பெண்களுக்கு பரிசு வழங்கினர். முதல் பரிசு கடலுார் சாரூண்யா, திட்டக்குடி ஜெயந்தி, கடலுார் ஆனைக்குப்பம் உமா ஆகியோருக்கு முதல் பரிசாக வாஷிங் மெஷினை வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ் வழங்கி பாராட்டினார். இரண்டாம் பரிசு புவனகிரி கீரப்பாளையம் பரிமளா, கடலுார் வண்ணாரப்பாளையம் ஆர்த்தி, துாக்கணாம்பாக்கம் சுபா ஆகியோருக்கு இரண்டாம் பரிசாக பிரிட்ஜ் வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசு தாழங்குடா வள்ளி, சின்னகங்கணாங்குப்பம் கவிதா, நெய்வேலி டவுன்ஷிப் அகிலாண்டேஸ்வரி அலமேலு ஆகியோருக்கு மூன்றாம் பரிசாக ஸ்மார்ட் 'டிவி' வழங்கப்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசை வடலுார் டி.ஆர்.எம்.சாந்தி பர்னிச்சர் உரிமையாளர்கள் ராஜமாரியப்பன், சாந்தி ராஜமாரியப்பன் ஆகியோர் வழங்கினர். அனைவருக்கும் பரிசு கோலப்போட்டியில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் சேலை, மளிகை பொருட்கள், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட 17 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப் பு பரிசாக வழங்கப்பட்டன. கவுரவிப்பு மெகா கோலப்போட்டி பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள், சிறந்த கோலங்களை தேர்வு செய்த நடுவர்கள் அடங்கிய குழுவினர் மற்றும் கோலப் போட்டியை இணைந்து வழங்கியவர்களுக்கு 'தினமலர்' நாளிதழ் சார்பில் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. மருத்துவ முகாம் கடலுார் சுரேந்திரா மருத்துவமனை செய்தி தொடர்பாளர் கவிமணி தலைமையில் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் வசதிக்காக சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர். சில்வர் பீச்சில் நடைபயிற்சி சென்றவர்களும் பரிசோ தனை செய்து கொண்டனர். பஸ் வசதி ஏற்பாடு கோலப்போட்டியில் பங்கேற்க வந்தவர்களின் வசதிக்காக கடலுார் பஸ் நிலையம் மற்றும் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள இடங்களில் இருந்து அதிகாலை 5:00 மணி முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாக்கோலம் கடலுா ர் சில்வர் பீச்சில் மகளிர் வரைந்த வண்ண கோலங்களை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு பார்த்து ரசித்தனர். கோலமிட்டவர்களை பாராட்டியதுடன், சிறந்த கோலங்களை மொபைல் போனில் படம் பிடித்தும் அருகில் நின்று 'செல்பி' எடுத்தும் மகிழ்ந்தனர். போட்டியாளர்கள், பார்வையாளர்கள் என, 2 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் குவிந்ததால், சில்வர் பீச் விழாக்கோலமாக காட்சியளித்தது. பங்கேற்றவர்கள் கவுன்சிலர்கள் கிரேசி, மகேஸ்வரி விஜயகுமார், ஆராமுது உட்பட பலர் பங்கேற்றனர். தேவனாம்பட்டினம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.