உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆஸ்துமா, மூச்சுத்திணறல் உள்ளவர்கள் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் டாக்டர் கலைக்கோவன் விளக்கம்

ஆஸ்துமா, மூச்சுத்திணறல் உள்ளவர்கள் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் டாக்டர் கலைக்கோவன் விளக்கம்

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் கோவன் நுரையீரல் சிகிச்சை மையத்தின் டாக்டர் கலைக்கோவன், தீபாவளி பண்டிகையின் போது ஆஸ்துமா, மூச்சுத்திணறல் உள்ளவர்கள் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: பொதுவாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் மாசு மற்றும் துாசிகள் வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் காற்று மண்டலத்திலேயே கலந்திருக்கும். இதனால் குளிர்காலங்களில் மூச்சுத்திணறல் பிரச்னைகள் அதிகமாக ஏற்படும். இது, தீபாவளியின் போது ஏற்படும் பட்டாசு புகையில் மேலும் அதிகரிக்கும். எனவே, ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் பிரச்னை உள்ளவர்கள், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வீடுகளை சுத்தம் செய்யும்போது மூச்சுத்திணறல் பிரச்னை உள்ளவர்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். புகை அதிகம் வெளியிடும் பட்டாசுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மூச்சுத்திணறல் பிரச்னை உள்ளவர்கள், எண்ணெய் பலகாரங்களை அதிகமாக சாப்பிடக்கூடாது. அதிக எண்ணெய் மற்றும் கார வகை பலகாரங்கள் மூலம் பிரச்னை அதிகரிக்கலாம். மக்கள் அதிகமாகக்கூடும் துணிக்கடை, ஷாப்பிங் மால் போன்ற இடங்களுக்கு செல்லாமல் தவிர்த்தல் நல்லது. இச்சமயத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் பரவும் அபாயம் அதிகம். தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என தெரிவித் துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை