உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் ஜி.கே., கல்விக் குழுமம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளி வளாகத்தில் தவங்கிய ஊர்வலத்திற்கு, ஜி.கே., கல்விக் குழும தலைவர் குமாரராஜா தலைமை தாங்கினார். சேத்தியாதோப்பு டி.எஸ்.பி., விஜயகுமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பேரூராட்சி சேர்மன் கணேசமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், சப் இன்ஸ்பெக்டர் நடராஜ் கல்வி குழும நிர்வாகிகள் அருண், அகிலன் மற்றும் முதல்வர் பார்த்திபன், தேவதாஸ், பாலதண்டாயுதபாணி உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலம், முக்கிய வீதிகளில் சென்று, பொதுமக்களுக்கு போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை