உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா

அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா

கடலுார்: கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. நலப்பணிகள் இணை இயக்குனர் ஹிரியன் ரவிக்குமார் தலைமை தாங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர், நிலைய மருத்துவர் கவிதா, குடும்ப நல மருத்துவ துணை இயக்குனர் பாலகுமரன் முன்னிலை வகித்தனர். மருத்துவர் ஸ்ரீதரன் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் எஸ்.பி.,ராஜாராம், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மகப்பேறு மருத்துவர் பரமேஸ்வரி, கடலுார் சுகந்தி மளிகை கடை உரிமையாளர் செல்லப்பாண்டியன், ராஜ்குமரன், ராம்குமார் வாழ்த்தி பேசினர்.இளம் கடலுார் குழு ஒருங்கிணைப்பாளர் வனிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !