விருதை நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா
விருத்தாசலம்: விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு, கூடுதல் மாவட்ட நீதிபதி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.முதன்மை சார்பு நீதிபதி ஜெகதீஸ்வரி, கூடுதல் சார்பு நீதிபதி செல்வராஜ், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அன்னலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில்,கூடுதல் அரசு வழக்கறிஞர் செந்தில்குமார், பார் அசோசியேஷன் தலைவர் சாவித்திரி, விருதை பார் அசோசியேஷன் தலைவர் விஜயகுமார், மூத்த வழக்கறிஞர்கள் பாலச்சந்திரன், விஸ்வேஸ்வரன், பூமாலை, குமாரசாமி, பழனிமுத்து, தங்கவேலு, ரங்கநாதன், அண்ணாமலை, சங்கர், கணேஷ், ராஜா, சம்பத், தன்ராஜ், சண்முகவேல், தமிழழகன், விநாயகம், சதீஷ்குமார், கிருஷ்ணராஜ், பெண் வழக்கறிஞர்கள் கணபதி ஆனந்த ஜோதி, பரமேஸ்வரி, பத்மப்ரியா, கவுசல்யா ரேவதி, ஜெனிபர் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.