உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலி ஐ.பி.எஸ்., அதிகாரி கைது

போலி ஐ.பி.எஸ்., அதிகாரி கைது

சிதம்பரம் : சிதம்பரத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரி எனக் கூறி, அலம்பல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் நகர போலீஸ்காரர் பிரசாந்த், நேற்று இரவு கீழ வீதியில் ரோந்து சென்றார். அப்போது, 35 வயதுடைய வாலிபர், டிப்டாப் உடையில் நின்றுகொண்டு, ஐ.பி.எஸ்., அதிகாரி, உளவு பிரிவான 'ரா'வில் பணிபுரிவதாக கூறி அலம்பல் செய்து கொண்டிருந்தார்.சந்தேகமடைந்த போலீஸ்காரர் பிரசாந்த், அந்த வாலிபரை விசாரித்தார். அப்போது அவர், ஐ.பி.எஸ்., அதிகாரி. என்னையே கேள்வி கேட்கிறாயா என மிரட்டினார்.இதுகுறித்து பிரசாந்த் அளித்த தகவலை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அதில், ஐ.பி.எஸ்., அதிகாரி எனக்கூறி அலம்பல் செய்தவர் பரங்கிப்பேட்டை ஆத்தங்கரை தெருவை சேர்ந்த நீலஒளி மகன் சிவசுப்ரமணியன்,35; என்பதும் தெரிய வந்தது.இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து சிவசுப்ரமணியனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை