உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

விவசாயிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே விவசாயி வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை வனத்துறையினர் அகற்றினர்.விருத்தாசலம் - கருவேப்பிலங்குறிச்சி இடையே காப்புக்காடு உள்ளது. இதில், மான், முயல், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. காப்புக்காடு பகுதி அருகே உள்ள ஆலிச்சிகுடி, இளமங்கலம், சாத்துக் கூடல், கருவேப்பிலங்குறிச்சி பகுதி விவசாயிகள் சட்ட விரோதமாக தங்களது விளை நிலங்களில் மின் வேலிகளை அமைப்பதால் வனவிலங்குகள் மின் வேலியில் சிக்கி பலியாகிறது.இந்நிலையில், விவசாயி ஒருவர் தனது வயலில் மின்வேலி அமைத்துள்ளதாக விருத்தாசலம் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், அங்கு சென்ற வன சரக அலுவலர் ரகுவரன் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் மற்றும் விருத்தாசலம் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்து, விவசாயி போட்டிருந்த மின்வேலியை அகன்றினர்.மேலும் வனவிலங்குகளை வேட்டையாட மின் வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை