உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாஜி., எம்.எல்.ஏ.,விற்கு பா.ஜ.,வினர் வரவேற்பு

மாஜி., எம்.எல்.ஏ.,விற்கு பா.ஜ.,வினர் வரவேற்பு

புவனகிரி : பா.ஜ., வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ., அருள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு புவனகிரி பா.ஜ., நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.டில்லியில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் முன்னிலையில் புவனகிரி முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அருள் தன் ஆதரவாளர்களுடன் பா.ஜ., வில் இணைந்தார். பின் சொந்த ஊர் திரும்பிய அவரை, புவனகிரி தொகுதி பா.ஜ., பொறுப்பாளர் ஸ்ரீதரன் தலைமையில், மாவட்டத் துணைத் தலைவர் கோபிநாத் கணேசன், மாவட்ட செயலாளர் திருமாவளவன், பட்டியலணி மாநில துணைத் தலைவர்கள் சரவணகுமார், வெற்றிவேல், ஒன்றியத் தலைவர் பகிரதன், நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளர் ஜோதி, பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர்கள் வள்ளலார், ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர் கந்தசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ