உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஸ்ரீமுஷ்ணத்தில் கருட சேவை

ஸ்ரீமுஷ்ணத்தில் கருட சேவை

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் நம்மாழ்வார் கைங்கர்ய சபா, பஜனை குழுவினர்கள், வானமாமலை மடத்தின் பொறுப்பாளர்கள் சார்பில் பன்னிரு கருட சேவை விழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், ஆண்டிமடம்,சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து 27 பெருமாள் சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீமுஷ்ணத்தில் எழுந்தருள செய்யப்பட்டனர். அங்கு, ஆஞ்சனேயர் சன்னதி அருகே பெருமாள் சுவாமிகளின் ஊர்வலத்தை பேரூராட்சி சேர்மன் செல்விஆனந்தன் துவக்கி வைத்தார். தொடர்ந்து பஜனை குழுவினர்களின் கோலாட்டம், கும்மியடித்து சாமிகளை வரவேற்றனர். பின்னர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை வானமாமலை மட பொறுப்பாளர் பாலாஜி, மன்னம்பாடி ராமதாஸ், ஆடிட்டர் வாசுதேவன், நம்மாழ்வார் கைங்கர்ய சபா, பஜனை மடத்தின் தலைவர் சுப்ரமணியன், தங்கராசு, சடகோபன், ரவிச்சந்திரன்,ராஜேந்திரன், பாலசுப்ரமணியன், சிவராமன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ