உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேப்பூர் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

வேப்பூர் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

வேப்பூர் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வேப்பூர் வார சந்தையில் 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.கடலுார் மாவட்டம், வேப்பூர் கூட்டுரோட்டில் வெள்ளிக்கிழமையில் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு குவிந்தன.வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கினர். ஒரு ஆடு அதிகபட்சமாக ரூ. 16 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. நேற்று ஒரே நாளில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !