அரசு கல்லுாரி பேராசிரியர்கள் வாயிற் முழக்க போராட்டம்
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில், தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற் முழக்க போராட்டம் நடந்தது.மண்டல தலைவர் மகேசன் தலைமை தாங்கினார். கிளை செயலர் முருகேசன், கிளை தலைவர் சுந்தரச்செல்வன், பொருளாளர் வேல்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர்கள் கருணாநிதி, பிரதீப்குமார் மற்றும் கல்லுாரி பேராசிரியர் பலர் பங்கேற்றனர்.இதில், அரசு கல்லுாரிகளில் பணி அமர்த்தப்பட்ட அண்ணாமலை பல்கலை., உபரி பேராசியர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.