உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் சிகாமணி தலைமை தாங்கினார்.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் சைமன் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் செல்வி ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.இதில் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் புனிதவள்ளி,வார்டுகவுன்சிலர் சதீஷ்குமார், முதுகலை ஆசிரியர் பொன்மணி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சி நடந்தது. முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ரத்தினசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை