மேலும் செய்திகள்
ஆய்வு மையம்
28-Nov-2025
திட்டக்குடி: திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் மணிகண்டன் தலைமை தாங்கினார். தமிழ் பேராசிரியர் மாரியப்பன் வரவேற்றார். உயர்கல்வி வழிகாட்டி நிபுணர் எழிலன் பங்கேற்று, டி.என்.பி.எஸ்.சி., - யு.பி.எஸ்.சி., - ஆர்.ஆர்.பி., - வங்கி தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறுவது குறித்தும், வேலை வாய்ப்புகள் பெறுவது குறித்தும் பேசினார். பேராசிரியர்கள் பிரகாஷ், ராஜூ, மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் வீரபாண்டியன் நன்றி கூறினார்.
28-Nov-2025