உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஆறுமுக நாவலர் பள்ளியில் குருபூஜை

 ஆறுமுக நாவலர் பள்ளியில் குருபூஜை

சிதம்பரம்: சிதம்பரம் கனகசபை நகரில் உள்ள சேக்கிழார் கோவிலில் இருந்து, ஆறுமுக நாவலருக்கு அபிஷேக ஆராதனை செய்து ஊர்வலம் துவங்கியது. தெற்கு வீதி வழியாக, மேல வீதியில் உள்ள ஆறுமுக நாவலர் பள்ளிக்கு ஊர்வலம் சென்றடைந்தது. தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியர் ராம்குமார் வரவேற்றார். பள்ளிகுழு செயலர் அருள்மொழிச்செல்வன், நாவலர் கையாண்ட போஜனம் என்ற தமிழ் சொல்லின் பெருமை குறித்தும், முன்னாள் ஆசிரியர் சீனி மோகன், ஆறுமுக நாவலர் குறித்தும் பேசினர். சிறப்பு விருந்தினர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பேராசிரியை சிவகவுரி கிரிஷ்குமார் பேசினார். துவக்க பள்ளி தலைமை ஆசிரியை கலைச் செல்வி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி