உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.35 லட்சத்தில் சுகாதார நிலையம்

ரூ.35 லட்சத்தில் சுகாதார நிலையம்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில், 35 லட்சம் ரூபாய் செலவில், புதிய துணை சுகாதார நிலையம் கட்டும் பணி துவங்கியது.பரங்கிப்பேட்டை பேரூராட்சி 2023-24ம் ஆண்டு 15வது நிதி குழு மானியம் திட்டத்தில், கொடிமரத் தெருவில் 35 லட்சம் ரூபாய் செலவில் புதிய துணை சுகாதார நிலையம் கட்டப்படுகிறது. அதற்கான பூமி பூஜை நடந்தது. பேரூராட்சி கவுன்சிலர் செழியன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் முகமது யூனுஸ், செயல் அலுவலர் திருமூர்த்தி முன்னிலை வகித்தனர். பூமி பூஜையை, சேர்மன் தேன்மொழி சங்கர் துவக்கி வைத்தார்.மாவட்ட பிரதிநிதி சங்கர், உதவி பொறியாளர் கணேசன், கவுன்சிலர்கள் கணேசமூர்த்தி, மாரியப்பன், தொழில் நுட்ப உதவியாளர் பாபுராஜ், துப்புரவு மேற்பார்வையாளர் சுதாகர், அலி அப்பாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி