உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வி.கே.டி., பைபாஸில் ஆணைவாரி சாலை சந்திக்கும் இடத்தில் ஹைமாஸ் விளக்கு தேவை

 வி.கே.டி., பைபாஸில் ஆணைவாரி சாலை சந்திக்கும் இடத்தில் ஹைமாஸ் விளக்கு தேவை

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே வி.கே.டி., பைபாஸ் ஆணைவாரி சாலை சந்திக்கும் இடத்தில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆணைவாரி, நல்லதண்ணீர்குளம், மணக்காடு, நெல்லிக்கொல்லை ஆகிய கிராம மக்கள் சேத்தியாத்தோப்பு செல்ல ஆணைவாரி சாலையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது வி.கே.டி பைபாஸ் சாலை குறுக்கே செல்லும் இந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். பைபாஸ் சாலை அமைக்கும்போது, அப்பகுதி மக்கள் ஆணைவாரி கிராம சாலைக்கு சுரங்கப்பாதை அமைத்து தர பலமுறை கோரிக்கை விடுத்தும் நகாய் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இரவு நேரங்களில் மின் விளக்கு இல்லாததால் இச்சாலையை கடக்கும்போது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கின்றனர். பள்ளி மாணவ, மாணவிகள், காலை மாலை நேரங்களில் சாலையை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். இரவு நேர விபத்துகளை தடுக்க இப்பகுதியில் ஹைமாஸ் விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி