உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஹோட்டல்கள் சங்க நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்

 ஹோட்டல்கள் சங்க நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்

கடலுார்: மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் சார்பில், கடலுார் மாநகர ஹோட்டல்கள் சங்க நிர்வாகிகள் அறிமுகக்கூட்டம், மஞ்சக்குப்பம் ஆனந்தபவன் ஹோட்டலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கடலுார் மாவட்ட ஹோட்டல்கள் சங்க தலைவர் ஆனந்தபவன் ராம்கி நாராயணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தேவி முருகன், மாவட்ட பொருளாளர் ஆத்மலிங்கம் வாழ்த்திப் பேசினர். கடலுார் மாநகர ஹோட்டல்கள் சங்கத்தின் புதிய தலைவர் கார்த்திக்ராஜ், செயலாளர் சரவணன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். தொடர்ந்து ஹோட்டல்கள் துறை மற்றும் கடலுார் மாநகர ஹோட்டல் உரிமையாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் மற்றும் சங்க வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடலுார் மாநகர சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி