உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வீடு கட்டும் பணி தொய்வு: பழங்குடி நலச்சங்கம் மனு

 வீடு கட்டும் பணி தொய்வு: பழங்குடி நலச்சங்கம் மனு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே அரசின் வீடு கட்டும் பணி தொய்வடைந்து விட்டதாக கூறி பழங்குடி நலச்சங்கத்தினர் மனு அளித்தனர். விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தில் பழங்குடி இருளர் மக்களுக்கு ஜெம்மன் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 49 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து பழங்குடி நலச்சங்க மாவட்ட செயலாளர் அசோகன் தலைமை யில் 25க்கும் மேற்பட்டோர், விருத்தாசலம் பி.டி.ஓ., லட்சுமியிடம் அளித்த மனு: வீடு கட்டும் திட்டத்தை துரிதப்படுத்தி, விரைவாக முடிக்க வேண்டும்' என, கூறப்பட்டுப்பட்டுள்ளது. மா.கம்யூ., ஒன்றிய செ யலாளர் கலைச்செல்வன், மாவட்ட துணைத் தலைவர் வெங்கடேசன், மாவட்டக்குழு உறுப்பினர் கொளஞ்சி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை