உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கணவன்,மனைவி தாக்கு; 4 பேருக்கு வலை

கணவன்,மனைவி தாக்கு; 4 பேருக்கு வலை

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே முன்விரோதம் காரணமாக கணவன், மனைவியை தாக்கிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டை சேர்ந்தவர் சிவக்குமார்,35; இவர், நேற்று முன்தினம், தமது மனைவி அனிதாவுடன் நடுவீரப்பட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு, முன்விரோதம் காரணமாக, அதே ஊரை சேர்ந்த சந்திரசேகர், அவரது மகன் ராமதாஸ் மற்றும் கனிஷ்கர், கமலேஷ் ஆகிய 4 பேரும் சேர்ந்து சிவக்குமார், அனிதாவை தாக்கினர். காயமடைந்த சிவக்குமார் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் அனிதா கொடுத்த புகாரில், சந்திரசேகர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ