உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கணவர் மாயம் மனைவி புகார் 

 கணவர் மாயம் மனைவி புகார் 

பண்ருட்டி: கணவர் காணவில்லை என மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர். பண்ருட்டி, மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அமர்நாத், 26; இவர் வாணியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கஸ்துாரி, 24; இந்த தம்பதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அமர்நாத் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து பண்ருட்டி போலீசில் கஸ்துாரி புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிந்து அமர்நாத்தை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி