உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.1.18 கோடியில் வளர்ச்சி பணிகள் பரங்கிப்பேட்டையில் துவக்கி வைப்பு

ரூ.1.18 கோடியில் வளர்ச்சி பணிகள் பரங்கிப்பேட்டையில் துவக்கி வைப்பு

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில், 1 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சித் திட்ட பணிகளை சேர்மன் தேன்மொழி சங்கர் துவக்கி வைத்தார்.பரங்கிப்பேட்டை பேரூராட்சி 1 வது வார்டில், நமக்கு நாமே திட்டம் மற்றும் 15 வது நிதிக்குழு மான்ய திட்டத்தில் 1 கோடியே 18 லட்சம்மதிப்பில், புதியதாக தார் சாலை மற்றும் குடிநீர் தொட்டி புனரமைப்பு பணிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதையொட்டி பணிகளை, சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், துணை சேர்மன் முகமது யூனுஸ், மாவட்ட பிரதிநிதி சங்கர், முன்னாள் துணை சேர்மன் செழியன், கவுன்சிலர்கள் ஆனந்தன், ஜாபர் ஷரீப், தையல்நாயகி கணேசமூர்த்தி, பசிரியாமா ஜாபர் அலி, ராஜகுமாரி மாரியப்பன், ரொகையமா குன்முகமது, நஜிருன்னிசா அப்துல்கரீம், அலி அப்பாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ