உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கரும்புக்கு ஊக்கத் தொகை அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது விவசாய சங்க தலைவர் தகவல்

கரும்புக்கு ஊக்கத் தொகை அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது விவசாய சங்க தலைவர் தகவல்

நெல்லிக்குப்பம்: தமிழக அரசின் கரும்புக்கு ஊக்கதொகை அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழக வேளாண் பட்ஜெட்டில் பல வரவேற்க தக்க அம்சங்கள் உள்ளன. ஆனால் கரும்புக்கு கூடுதல் விலை அறிவிக்காதது ஏமாற்றத்தை தருகிறது. தமிழக வேளாண் பட்ஜெட்டில் ஊக்க தொகையாக டன்னுக்கு 215 ரூபாய் சேர்த்து 3,131 விலை தான் கிடைக்கும். தமிழக அரசின் ஊக்க தொகை நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும். பஞ்சாப், அரியானா மாநிலங்களில் மாநில அரசு அறிவிக்கும் விலையை ஆலைகள் வழங்குகின்றன.தமிழகத்தில் வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்து விட்டு மாநில அரசு பரிந்துரை விலை அறிவித்து பெற்று தர கேட்டு வருகிறோம். ஆனால் தமிழக அரசு அதற்கு நடவடிக்கை எடுக்காமல் கடந்த ஆண்டு 195 ஊக்க தொகை வழங்கிய நிலையில் 20 ரூபாய் மட்டும் உயர்த்தி நடப்பு ஆண்டு 215 அறிவித்துள்ளது.இதன் மூலம், இந்த ஆண்டு குவிண்டாலுக்கு 2 ரூபாய் மட்டுமே உயர்த்தியிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தில் மூடியுள்ள சர்க்கரை ஆலைகளை திறக்க எந்த அறிவிப்பும் இல்லை. எனவே, தமிழக அரசும் கூடுதல் விலை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை