உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டெங்கு ஒழிப்பு பணி அதிகாரிகள் ஆய்வு

டெங்கு ஒழிப்பு பணி அதிகாரிகள் ஆய்வு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிகளில், டெங்கு ஒழிப்பு பணிகளை, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிகளில் டெங்கு பரவாமல் தடுக்க, 40 பெண் ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று கொசு உற்பத்தியை தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் முறையாக ஈடுபடுகிறார்களா என, நகராட்சி வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு செய்தார். அப்போது பணிக்கு தாமதமாக வந்த பணியாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை