உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வடலுார் சத்தியஞான சபையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

வடலுார் சத்தியஞான சபையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

கடலுார், : வடலுாரில் சத்தியஞான சபையில் தைப்பூச விழாவை முன்னிட்டு சமைக்கப்படும் உணவை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.வடலுார் சத்தியஞான சபையில் நாளை 25ம் தேதி தைப்பூச விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அதிகாரி கைலாஷ் குமார் தலைமையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நல்லதம்பி, சுப்பிரமணியன், சுந்தரமூர்த்தி ஆகியோர் சத்தியஞான சபையில் தயார் செய்யப்படும் உணவுகளை ஆய்வு செய்தனர்.சுகாதார முறை, இருப்பு வைத்திருக்கும் முறை, பக்தர்களுக்கு சமைத்து வழங்கப்படும் அன்னதான மண்டபங்களை ஆய்வு செய்தனர். அன்னதானம் வழங்குபவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது, சூடான நிலையில் உணவுப் பொருட்களை வழங்க வேண்டும், பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டுமென, ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை