உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பாதுகாப்பான குடிநீர் வழங்க அறிவுறுத்தல்

 பாதுகாப்பான குடிநீர் வழங்க அறிவுறுத்தல்

சிறுபாக்கம்: ஊராட்சிகளில் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டுமென ஊராட்சி நிர்வாகத்திற்கு பி.டி.ஓ., சண்முக சிகாமணி அறிவுறுத்தியுள்ளார். அவரது செய்திக்குறிப்பு: மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பருவமழை பெய்து வருகிறது. இதனால், தெருக்களில் தேங்கும் மழை நீர், பொது மக்களுக்கு வினியோகம் செய்யும் குடிநீருடன் கலக்கும் வாய்ப்புள்ளது. இதனை தடுக்க தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், சேதமடைந்த குடிநீர் பைப் லைனை சீரமைத்து பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும். தெரு மின்விளக்குகளை பராமரிக்க வேண்டும். தெருக்கள் தோறும் பிளிச்சிங் பவுடர் தெளித்து நோய் தொற்று பரவாமல் சுகாதார நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ