வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நல்ல வளர்ச்சி.
விருத்தாசலம் : இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தனது குடும்பத்தினருடன் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 'காசியை விட வீசம் அதிகம்' என்ற பெருமை பெற்றது. ேலும், இக்கோவிலில் 5 கோபுரம், 5 கொடிமரம், 5 நந்தி, 5 மண்டபம் இருப்பது கூடுதல் சிறப்பு.இக்கோவிலுக்கு, பிரம்மோஸ் ஏவுகணையின் தந்தை என அழைக்கப்படும் இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை நேற்று காலை 9:30 மணிக்கு குடும்பத்தினருடன் வருகை தந்தார். தொடர்ந்து, விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை அம்மன், ஆழத்து விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு சென்றார்.
நல்ல வளர்ச்சி.