சோமசுந்தரேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி
புவனகிரி: புவனகிரி சோமசுந்தரேஸ்வரர் கோவில், பெருமாத்துார் வேத புரீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்தது. இரு கோவில்களிலும் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று காலை 9.00 மணிக்கு அபிஷேகமும், பகல் 12.00 மணி -தீபாராதனை நிகழ்ச்சியும் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். நேற்று காலை, மாலை என இரு வேளையும் பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் பாடினர். இரவு 7.00 மணியளவில் மகா தீபாராதனையை தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திரு வீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை வெள்ளியம்பல சுவாமிகள் மடத்தில் அறங்காவல் குழுத் தலைவர் ரத்தினசுப்ரமணியர், பெருமத்தூர் வேதபுரீஸ்வரர் கோவிலில் விழா குழுவினருடன் இணைந்து பொன்னுசாமி முதலியார் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.