உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி: அமைச்சர் பன்னீர்செல்வம் புகழாரம் 

பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி: அமைச்சர் பன்னீர்செல்வம் புகழாரம் 

கடலுார் : பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.கடலுார், கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் பள்ளியில் நடைபெற்ற கலைஞர் பண்பாட்டு பாசறை விழாவில், விழா சிறப்பு மலரை வெளியிட்ட அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது;முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம், மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், உள்ளாட்சியில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து சாதனை படைத்தார்' என்றார்.தொடர்ந்து நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் கணேசன் பரிசுகள் வழங்கி பேசுகையில், '14 வயதில் எழுத துவங்கிய கருணாநிதி 91 வயது வரை எழுதினார். கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைத்து சாதனை படைத்தார். தமிழுக்கும், தமிழர் பண்பாட்டிற்காகவும் பாடுபட்டவர் கருணாநிதி. அவர் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழுக்காக வாழ்ந்தவர்' என்றார். விழாவில் கலைநிகழ்ச்சியை துவக்கி வைத்து அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், 'முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை பல்வேறு துறைகள் சார்பில் கொண்டாடுகிறோம். கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்கான சமச்சீர் கல்வியை கொண்டு வந்தவர் கருணாநிதி. இசைப் பள்ளிகளை துவங்கியவர் கருணாநிதி' முதல்வர் ஸ்டாலின், மனிதரில் ஏற்றத் தாழ்வுகளை அகற்ற வேண்டும் என்பதற்காக கருவறை முதல், கல்லறை வரை அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை