உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொத்தட்டை பள்ளி ஆண்டு விழா

கொத்தட்டை பள்ளி ஆண்டு விழா

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் அம்புஜம், ஊராட்சி வார்டு உறுப்பினர் வசந்தா முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் முருகன் வரவேற்றார். உதவி தொடக்க கல்வி அலுவலர் உமாராணி, கொத்தட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா ஆகியோர் பேசினர்.விழாவில், பேராசிரியர் ரங்கசாமி மற்றும் மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.ஆசிரியர் லைனல்ராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ